இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்...!
அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு (2023) வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் வியப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அவசர சிகிச்சை
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த பிரிவுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர்.
இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் போயும், கடந்த ஆண்டில் ஏராளமானோர் மரணம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்து மருத்துவமனை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த ஆண்டின் (2024) பெப்ரவரி ஆண்டில் மாத்திரம் இங்கிலாந்து மருத்துவமனைகளின் அவசரகால பிரிவில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் என தெரிய வந்துள்ளது.
இது கடந்த 2023-ம் ஆண்டில் 15 லட்சம் நோயாளிகள் என்ற அளவில் இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |