அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
இங்கிலாந்தில் பெண் ஒருவர் அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரோமா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சம்பாதிப்பவராவார்.
இவர் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தியே இந்த வருமானத்தை பெற்று வருகிறார்.
குழந்தை பிறந்த பெற்றோர்களுக்கு
குழந்தை பிறந்த பின்னர் குழந்தையை தூங்க வைப்பது எப்படி,முறையாக தாய்ப்பால் கொடுப்பது எப்படி சத்தான உணவை குழந்தைகளுக்கு தயாரிப்பது எப்படி, குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் எப்படி சாப்பிட வைக்க வேண்டும், புத்திசாலி குழந்தைகளாக எப்படி வளர்க்க வேண்டும், குழந்தைகளிடம் எப்படி அணுக வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், போன்ற தகவல்களை அவர் வழங்குகின்றார்.
பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் செய்ய அவர் ஒரு மணி நேரத்தில் £290 (இலங்கை பணமதிப்பில் ரூ.1,15,235) பெறுவதாகவும் இதனால் அவர் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |