உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு விசாரணை - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை..!
நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க வேண்டாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்களுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை நிதிச் செயலாளரும் சட்டமா அதிபரும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், மார்ச் 03 அன்று சிறிலங்கா உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஆளும் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் சவால் செய்ததை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்க எம்.பி.க்கள், சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோருகின்றனர்.
மறுபரிசீலனை
இதைப் பற்றி பார் கவுன்சிலின் தலைவர் நிக் வினெல் கேசி அடிக்கோடிட்டுக் காட்டினார்,
"சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசுகள் இணங்க வேண்டும் என்ற கொள்கையும் அதுவே.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றக் குழுவின் முன் விசாரிப்பதன் சரியான தன்மையை சிறிலங்காவின் நாடாளுமன்ற அதிகாரிகள் “மிகக் கவனமாக” மறுபரிசீலனை செய்வார்கள் என்று பார் கவுன்சில் நம்புவதாக தெரிவித்தார்.
அதேபோன்று நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாததை ஊக்குவிப்பது சரியானதா என்பதை சிறிலங்கா அரசாங்கம் மிகக் கவனமாக பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என அவர் கூறினார்.
தேர்தலுக்கான நிதி
முழு அறிக்கை
இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 19 மார்ச் 2023 க்குள் நடந்திருக்க வேண்டும். சிறிலங்கா நாடாளுமன்றம் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகள் இருந்தபோதிலும் நிதி வெளியீடு தடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 3 2023 அன்று, இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாட்டின் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான நிதியை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்குமாறு அட்டர்னி ஜெனரல் மற்றும் திறைசேரியின் செயலாளருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தையை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்புவதற்கான கோரிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமீபத்தில் ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் தொடர்பான விடயங்கல்
மேலும் மார்ச் 10 அன்று சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் கூறினார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு சிறப்புரிமைப் பிரச்சினையைக் கேட்பதற்கு முன் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடுமையான குற்றமாகும்.
மேற்படி நாடாளுமன்ற குழு இந்த விடயம் தொடர்பான விசாரணையை முடிக்கும் வரை தேர்தல் தொடர்பான விடயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்குமாறு பிரதி சபாநாயகரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இந்த இடைக்கால உத்தரவின் நகலை 2023 மார்ச் 22 அன்று சிறப்புரிமைகள் குழு முன் வைக்குமாறு நாடாளுமன்ற அதிகாரிகள் நீதிமன்றப் பதிவேட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விசாரிப்பதன் சரியான தன்மை
நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய ஐ.நா.வின் அடிப்படைக் கோட்பாடுகள், "நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதும், கடைப்பிடிப்பதும் அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின் கடமையாகும்" என்றும், "நீதித்துறைச் செயல்பாட்டில் தகாத அல்லது தேவையற்ற தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றங்களின் நீதித்துறை முடிவுகள் திருத்தத்திற்கு உட்பட்டதாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில் தலைவர் நிக் வினேல் கேசி கூறுகையில்,
"சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளை அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கையும் அதுதான்.
“நாடாளுமன்ற குழுவின் முன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரிப்பதன் சரியான தன்மையை சிறிலங்கா நாடாளுமன்ற அதிகாரிகள் மிகக் கவனமாக மறுபரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் கீழ்ப்படியாமையை ஊக்குவிப்பது எப்போதுமே சரியானதா என்பதை சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கவனமாக பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என குறித்த நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
