இங்கிலாந்து இளவரசி இலங்கைக்கு விஜயம்
Sri Lanka
Sri Lankan Peoples
England
By Dilakshan
இங்கிலாந்து இளவரசி ஆன்(Anne) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலானது, இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இராஜதந்திர உறவுகள்
அத்தோடு, இளவரசி ஆன் மற்றும் அவரது பங்குதாரரான வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸ் ஆகியோரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி