பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்துங்கள்! அதிகாரிகளிடம் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள வேண்டுகோள் (படங்கள்)
ஏ9 வீதியூடான போக்குவரத்திற்கு கால்நடைகளினால் பெரும் இடையூறு ஏற்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் “A9 வீதி பிரயாணத்தில் கவனிக்கப்பட வேண்டியவை. பாதுகாப்பான பயணத்தை எவ்வாறு உறுதி செய்வது” எனும் தலைப்பிட்ட குறித்த விடத்தினை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தனது பதிவில்,
மேற்படி வீதி (ஏ9) புதிப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக பயணத்தை மேற்கொள்ளும் வாகனங்களில் சில மோதுண்டு பல உயிர்கள் பலி எடுக்கப்பட்டுள்ளன. பலர் அங்கவீனம் ஆக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள் விபத்துகளில் சிக்கி மடிந்து போயின.
வைத்தியசாலைகளிலன் சத்திரசிகிச்சை விடுதிகள் இவ்வாறான விபத்துகளினாலும் ஏனைய விபத்துகளினாலலும் நிரம்பி வழிகின்றன. இந்த அவல நிலை தொடரலாமா, ? இதை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது ?
1. அரசு உயரதிகாரிகள் கலந்துரையாடி நீண்ட காலத்தில் பிரச்சினை தீர்க்க வழிகளை ஏற்படுத்த முடியும்.
2. சாரதிகள் இப்பகுதிகளில் மெதுவாக பயணிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும்.
3. காவல்துறையினர் வேகக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவேண்டும்
4. கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் ( உரிமையாளர்கள் கால்நடைகளின் உயிர் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை)
மேற்கூறப்பட்ட நான்கு விடயங்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் விபத்துக்களில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது ?????? வாகனங்களில் பிரயாணிக்கும் ஏனையவர்கள் வாகன சாரதியை வேகத்தை கட்டுப்படுத்தி 50 கிலோமீற்றருக்கும் குரறவான வேகத்தில் பிரயாணிக்க மிகக்கடுமையாக அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை ? ? ? ? ?. என்று அவர் மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


