ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்: வெளியான அறிவிப்பு

Ampara Douglas Devananda General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 08, 2024 12:43 PM GMT
Report

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (8) நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும். அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகின்றேன். கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்: வெளியான அறிவிப்பு | Epdp To Contest Solo In Ampara District

தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை.காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது. தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பது தான் எமது முதல் நோக்கமாகும்.

இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது ஒரு உசிதமான விடயமல்ல.எமது மாவட்டத்திற்கு கடந்த கால தேர்தல்களில் பல கட்சியினர் வருகின்றார்கள்.போகின்றார்கள்.வாக்கு கேட்கின்றார்கள்.

அத்துடன் அவர்களின் விடயங்கள் முடிந்து போகும்.ஆனால் இங்கு நாங்கள் மாத்திரமே மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகிறோம்.இம்முறை தேசியத்தை விட்டு ஈபிடிபி கட்சியினை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் கடந்த 30 ஆண்டு காலமாக டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பல்வேறு அமைச்சுகளை பெற்று மக்கள் சேவை செய்து வருகின்றார்.

அநுரவுடன் இணைந்து செயற்படுவோம்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அநுரவுடன் இணைந்து செயற்படுவோம்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

பொருத்தமான கேள்வி

அவருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எம்மக்கள் நன்மை பெறுவார்கள்.சிலர் அவரை நோக்கி இங்கு என்ன அபிவிருத்திகளை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்: வெளியான அறிவிப்பு | Epdp To Contest Solo In Ampara District

அது பொருத்தமான கேள்வி அல்ல என்றே கூறுவேன். வடகிழக்கில் அவர் தனது சேவை காலத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். ஆனால் அவரிடம் இங்குள்ளவர்கள் அணுகி எதுவும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை.

மக்களோ அல்லது சங்கங்களோ அவருடன் சந்தித்து கதைத்து அவரிடம் பெறுவோம் என்றும் நினைத்ததில்லை.ஆனால் மக்களின் அபிலாஷைகளை எம்போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும். இதற்கு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும்.

விடுதலை உரிமை

அந்த நம்பிக்கையில் தான் இன்று தேர்தலில் இறங்கியுள்ளோம்.மக்கள் இவ்விடயங்களை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். எனவே 74 வருடங்களாக விடுதலை உரிமைகளை பேசிக்கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிடுவதை விட்டுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பாதையை நோக்கி செல்ல வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூட்டங்களை நடாத்திக்கொண்டு தற்போது மக்களை குழப்ப முற்படுகின்ற சம்பவமும் இடம்பெற்று வருகின்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்: வெளியான அறிவிப்பு | Epdp To Contest Solo In Ampara District

இந்த பொதுக்கட்டமைப்பு தேர்தல் காலத்தில் முளைத்த ஒரு அமைப்பு தான். மக்களுக்கு கிடைக்க வேண்டியதையும் இல்லாமல் செய்ய முற்படுகின்றார்கள். அவர்கள் உள்நோக்கம் கொண்ட அமைப்பு தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இத்தேர்தல் காலங்களில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

மக்கள் விழிப்படைய வேண்டும். உங்கள் வாக்குகள் பெறுமதி மிக்கது.பெறுமதி மிக்க தலைவர்களுக்கு வாக்களிக்க முற்பட மக்கள் முன்வர வேண்டும்” என்றார்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011