பேச்சுவார்த்தை சூழலை சீர்குலைக்கும் அமெரிக்கா...! ஈரான் கடும் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்தில் இந்த வாரம் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரானியக் குழு பங்கேற்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நடவடிக்கை
அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைக்கான சூழலைச் சீர்குலைத்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை, டூஸ்கா (Touska) கப்பல் சிறைபிடிக்கப்பட்டது மற்றும் ஈரானின் உள்கட்டமைப்புகளை அழிப்போம் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான மிரட்டல்கள் ஈரானியத் தரப்பைத் தீவிரமாக யோசிக்க வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் சென்றோம் ஆனால் அமெரிக்கா எவ்விதத் தீவிரத்தன்மையும் இன்றிச் செயல்படுகிறது என பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகள் மற்றும் போர்க்குற்றங்கள் புரியப்போவதாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் எவ்விதத்திலும் ஏற்புடையவை அல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.
அமெரிக்கா ஒருபுறம் அமைதி பேசுவதும், மறுபுறம் ஈரானிய இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களில் ஈடுபடுவதும் இராஜதந்திர ரீதியிலான முதிர்ச்சியற்றத் தன்மையைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |