நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் போது அதன் நலன்கள் நுகர்வோரைச் சென்றடைவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுகும்புர (Sumith Udukumbura) நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ (Nalin Fernando) பதிலளிக்கையில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
கடந்த 20 ஆண்டுகளாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதுடன் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் நுகர்வோர் அதிகார சபையில் வெறும் 277 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று
அத்தோடு, நாடு முழுவதிலும் சேவையாற்றுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனவும் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி வர்த்தகர்கள் பாரிய இலாபமீட்டுவதாக நலின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |