சடுதியாக விலை குறைந்த இரண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் - வெளியான தகவல்
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
சீனிக்கான இறக்குமதி வரி
ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
