உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - அரசின் அறிவிப்பு
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களை வழங்குதல்
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு மேற்கோள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலானது அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் இடையில் நடைபெற்றது.
நிவாரணத்திற்காக உணவுப்பொருட்களை வழங்குதல் மற்றும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற தேவைகள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நுகர்வோருக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் நியாயமான விலையில் இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கான செயல்முறை குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |