பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சிற்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாயிலிருந்து 1,550 ரூபாயாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாயினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய, இச்சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |