சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி

Ilankai Tamil Arasu Kachchi E Saravanapavan M A Sumanthiran General Election 2024
By Thulsi Oct 21, 2024 05:29 AM GMT
Report

சுமந்திரன் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு உதவாத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (21.10.2024) நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அநுர அரசுக்கும் தொடர்பா..! பேராயர் அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அநுர அரசுக்கும் தொடர்பா..! பேராயர் அதிர்ச்சி தகவல்

விசேட அதிரடிப்படை புடை சூழ

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரன் வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார். பிரசாரக் கூட்டங்களுக்கு செல்வாராக இருந்தால் இலங்கையில் உள்ள அத்தனை விசேட அதிரடிப்படைகளும் அவரை புடை சூழ செல்ல வேண்டும். அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.

எங்களுடைய தேசியத்தை முழுமையாக தென் இலங்கையின் தேசியத்துடன் கலக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றவர் தான் சுமந்திரன். அதற்குரியாற் போல் தற்போது நடக்கிறது.


தமிழரசு கட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் வெளியேற்றி விட்டார். தமிழரசு கட்சியில் முக்கியஸ்தராக இருந்த கே.வி.தவராசா  கட்சியை விட்டு வெளியேறிய அடுத்த நாள் மாவை சேனாதிராஜா தனது அத்தனை பதவிகளிலும் இருந்து விலகியுள்ளார்.

மாவை சேனாதிராஜா கட்சியின் முதுகெலும்பு என வர்ணிக்கப்பட்டவர். கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்வதற்கு மிகவும் பாடுபட்டவர். இந் நிலையில் அந்த கட்சியை விட்டு விலகுவதை விட எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

ஜேவிபி ரில்வின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி

ஜேவிபி ரில்வின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி

முதுகெலும்பில்லாத சக்தியலிங்கம் 

வேட்பாளர் தெரிவு பட்டியலில் 17 பேர்கள் இருந்தார்கள். ஆனால் தனக்கு சாதகம் இல்லாதவர்களை, முதுகெலும்பில்லாத சக்தியலிங்கமும் சுமந்திரனும் இணைந்து நீக்கிவிட்டு, சுமந்திரன் தன்னுடன் சேர்த்து 9 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி | Eswarapatham Saravanapavan Blame Itak Sumanthiran

சர்வாதிகாரம் மிக்கவரால் நியமிக்கப்பட்டவருக்கு வாக்குகள் கிடைக்காது. ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட ஏழு பேரும் மக்களிடம் சென்று தமக்கு ஒரு விருப்பு வாக்கையும், அவர்கள் சொல்லும் இலக்கத்திற்கு மற்றைய விருப்பு வாக்கையும் போடும்படி கேட்பார்கள்.

அந்த மற்றைய விருப்பு இலக்கம் வேறு யாருடையதும் அல்ல, சுமந்திரனுடையதே. அந்தவகையில் இவர்கள் ஏழு பேரும் விருப்புவாக்கினை கேட்டால் அவர் நிச்சயமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்த விருப்பு வாக்கு கேட்பவர்களை கேட்கும் ஏனைய ஏழுபேரும் தாங்கள் வெல்லும் நிலையில் இருப்பார்களா என்பது கேள்விக்குறி.

ஏனென்றால் போடப்பட்ட ஏழு வேட்பாளர்களுமே கேள்விக்குரியவர்கள். அத்துடன் அந்த வேட்பாளர்களே வாக்குகளை கேட்பார்களோ தெரியவில்லை. அப்படி கேட்டால் அவர்களுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது. சஜித் பிரேமதாசாக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியினால் தீர்மானம் எடுக்கப்பட்டது. 41 பேர் இருக்க வேண்டிய தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் 26 பேர் இருந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி | Eswarapatham Saravanapavan Blame Itak Sumanthiran

அந்தத் தீர்மானத்தை மீறி விட்டார்கள் எனக்கூறி எனக்கும், சிறீதரனுக்கும் மேலும் சிலருக்கும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார்கள். எனவே சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தாலும் அந்த கட்சியின் விளக்கத்திற்கு அவர் பதில் கொடுக்க வேண்டும் அதே மத்திய குழு விரும்பினால் சிறீதரனை வைத்திருக்கலாம்.

அல்லது கட்சியின் தீர்மானத்தை மீறி விட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்படலாம். இவ்வாறு நீக்கப்பட்டால் சிறீதரன் வெற்றி பெற்றாலும் ஒரு மாதத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெறிதாக்கப்படலாம்.

அதுமட்டுமல்ல சிறீதரன் மூலமாக காட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தால் அது கட்டாயம் சுமந்திரனுக்கு செல்லும்.

ஆகையால் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் சிறீதரன் நாடாளுமன்றம் செல்ல மாட்டார். இலங்கை தமிழரசு கட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு உதவாத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன என ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள் - கஜிந்தன்

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு அறிக்கை - அநுரவின் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு அறிக்கை - அநுரவின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025