இனப்பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான போர் நிறைவடைந்து தற்போது 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போர் இல்லாத நாட்டில் பாதுகாப்புக்காக எதற்கு அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை மக்கள்
அத்துடன், இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியன, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகளவான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றுமொரு மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்குமென அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்த விடயம் கீழ் உள்ள காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்