விமானப் பயண நடைமுறையில் மாற்றம் - ஐரோப்பிய ஒன்றியம் தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான விமானப் பயணங்களின் போது கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறையில் இருந்து கட்டாய முக கவச நடைமுறை இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனா தொற்றுக்காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விமானப்பயணங்கள் உட்பட்ட போக்குவரத்து மார்க்கங்களின் போது கட்டாயமாக முக கவசங்களை அணியும் நடைமுறை இருந்தது.
இந்த நிலையில், இன்று முதல் விமான பயணிகள் இனிமேல் முக கவசங்களை அணியவேண்டிய அவசியம் இல்லையென ஒன்றியத்தின் வான் பயண பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கவுக்கு பயணிக்கும் விமானங்களில் இனிமேல் முக கவசங்களை அணிய வேண்டிய நடைமுறை கட்டாயமில்லை.
எனினும் ஜேர்மனி, கிரேக்கம் இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உட்பட்ட சில நாடுகள் தொடர்ந்தும் விமானப் பயணிகளுக்குரிய இந்த முக கவச நடைமுறையை உள்ளுரில் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன.
இதேபோல, இன்று முதல் ஒன்றிய நாடுகளில் பொதுப் போக்குவரத்து நடைமுறைகளுக்குரிய கொரோனா விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் விமானங்கள், தொடருந்துள் மற்றும் பேருந்துகளில் முக கவசங்களை அணியும் நியதியை பிரான்ஸ் நீக்கியுள்ளது.
எனினும் இத்தாலியில் அடுத்த மாதம் 15 வரை பொது போக்குவரத்தில் முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
