ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்...! ஈரானிடம் அதிரடி கோரிக்கை
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மீண்டும் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையாளர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமைதியான காலங்களில் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
விநியோகச் சங்கிலி
இந்நிலையில், ஈரான் நாடு இந்தக் கடல் பகுதியை நடைமுறையில் மூடியுள்ளதால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த விவகாரம் மற்றும் தற்போதைய போர்ச் சூழல் குறித்து பாரிஸில் நடைபெறவுள்ள ஜி7 (G7) நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |