இங்கிலாந்தில் "யூனிஸ் புயல்" - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கு கடந்த 32 வருடங்களில் வீசும் மிக மோசமான புயல் இது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யூனிஸ் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போய்விட்டதுடன் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன.
அப்பகுதிகளுக்கான பேருந்து மற்றும் ரயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
“நாம் அனைவரும் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ராணுவம் உதவுவதற்கு தயார்நிலையில்" உள்ளதாக உள்துறை அலுவலக அமைச்சர் டாமியன் ஹிண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
The @metoffice has issued a Red Weather Warning for much of the UK.
— Boris Johnson (@BorisJohnson) February 18, 2022
We should all follow the advice and take precautions to keep safe.
I thank responders for all their efforts. https://t.co/peqjkshdNf




