ஐரோப்பாவில் அதிக வேலைவாய்ப்புக்கள் உள்ள நாடு எது தெரியுமா...!
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்களை தேடி ஐரோப்பாவுக்கு குடிபெயர்கிறார்கள்.
இதனால், வருடாந்தம் ஐரோப்பாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு வேலைவாய்ப்புக்காக ஐரோப்பாவுக்கு பயணம் செய்துள்ளனர்.
ஐரோப்பாவின் போலந்து, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறாக பலர் குடிபெயர்ந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
ஐரோப்பாவின் போலந்துக்கு சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு தேடி பயணம் செய்துள்ளனர்.
போலந்தில் குறைந்தளவான சம்பளம் வழங்கப்பட்டாலும், குறித்த பகுதிக்கே வேலை தேடி அதிகளவானோர் குடிபெயர்ந்துள்ளனர்.
இதன்படி, 4 இலட்சத்து 47 ஆயிரத்து 225 பேர் வேலை விசாவுடன் போலந்தில் குடிபெயர்ந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வேலை விசா
இதையடுத்து, ஸ்பெயினுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேரும் ஜேர்மனிக்கு 75 ஆயிரம் பேரும் குடிபெயர்ந்துள்ளனர்.
இதன்படி, 1 இலட்சத்து 40 ஆயிரத்து 30 வேலை விசாக்கள் ஸ்பெயினுக்கும் 81 ஆயிரத்து 795 வேலை விசாக்கள் ஜேர்மனிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பெலரஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு தேடி அதிகளவானோர் குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |