வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா- மோல்டா நாடாளுமன்றில் தீர்மானம்!
cannabis
Europe
parliament
garden
By Kalaimathy
மோல்டா (Malta) அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு ஏழு கிராம் கஞ்சாவை வைத்திருக்கவும் தமது வீட்டுத் தோட்டத்தில் நான்கு கஞ்சா செடிகளை பயிரிடவும் அனுமதி வழங்கியுள்ளது.
மோல்டா, தெற்கு ஐரோப்பாவின் மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். ஏழு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மோல்டா நாடளுமன்றத்தில் கடந்த வாரம் கஞ்சா செடி வளர்ப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
எனினும் பகிரங்கமாக கஞ்சா புகைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதுடன் குழந்தைகளுக்கு எதிரில் கஞ்சாவை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் மோல்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி