கிழக்கில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்த ஐரோப்பிய ஒன்றியம்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால்
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தேர்தல்
பிரசார விடயங்கள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் குறித்த பணிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கண்காணிப்புக்கு குழுவினர் நேரடியாக விஜயம் செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகள், பொது மக்களின் பங்களிப்பு, ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாடு சம்பந்தமான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
தேர்தல் கண்காணிப்பு
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு நீண்டகால தேர்தல் நோக்கு மேற்பார்வையாளர் சிசிலியா கிவேணி தலைமையில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தேர்தல் நடவடிக்கைகள் சம்பந்தமான பணி மேற்பார்வை நடவடிக்கைகள் பார்வையிடப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி
ஆதரவாளர்களிடம் கூட்டங்களில் கலந்து கொண்டதற்கான நோக்கம் சம்பந்தமாகவும் தேர்தல்
சம்பந்தமாகவும் அக்குழுவினர் கலந்துரையாடினர்.
அத்துடன் தேர்தல்களில் சுதந்திரமாகப் பணியாற்றுகின்ற தன்மை, எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் சம்பந்தமாக ஊடகவியலாளர்களிடமும் நேரில் சந்தித்து கருத்துக்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |