உணவுப்பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
உணவுப்பொருட்களுக்கு இறக்குமதி தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் (European Union) திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், தனது விவசாயிகளை பாதுகாக்க குறைந்த தரச்சான்றிதழில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தடைகள் விதிக்க திட்டமிட்டுள்ளது.
இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நடைமுறைப்படுத்திய வர்த்தக தடைகளை ஒத்திருப்பதாக Financial Times தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள்
ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், அமெரிக்க சோயாபீன் உள்ளிட்ட பயிர்கள் இதில் அடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என EU சுகாதார ஆணையாளர் ஓலிவர் வார்ஹெலீ ஜனவரி மாதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், இறக்குமதி வரம்புகளை அதிகமாக கட்டுப்படுத்தும் முடிவை விரைவில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள்
ட்ரம்ப், உலக நாடுகள் அமெரிக்க பொருட்களை தடை செய்வதை கடுமையாக விமர்சித்து, மாறாக அமெரிக்கா (United States) தன் வர்த்தக தடைகளை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, 48 அமெரிக்க மாநிலங்களில் உள்ள ஷெல்ஃபிஷ் (Shellfish) ஐரோப்பா தடை செய்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த முடிவு, ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க வர்த்தக உறவுகளை மேலும் பாதித்து விவசாயத் துறையில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
