நாட்டில் அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பதிவு: வெளியான தகவல்
இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தரவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் 41,443 மின்சார வாகனங்களும் மற்றும் 2026 ஆம் ஆண்டில் 39,700 மின்சார வாகனங்களும் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
இந்தநிலையில் மேல் மாகாணம் (Western Province), மத்திய மாகாணம் (Central Province) மற்றும் தென் மாகாணம் (Southern Province) ஆகிய பகுதிகளில் மின்சார வாகனங்களின் பதிவில் மிக அதிகமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார வாகனங்களின் பதிவில் உயர்வு காணப்பட்ட போதிலும் நாடு முழுவதும் பயன்பாட்டிலுள்ள நான்கு மில்லியனுக்கும் அதிகமான உள் எரி பொறி (Internal Combustion Engine - ICE) வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது நாட்டில் உள்ள மொத்த மின்சார வாகனங்களின் சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சமநிலையற்ற தன்மையைத் தவிர்த்து மின்சார வாகனப் பயன்பாட்டை நாடு முழுவதும் பெருமளவில் ஊக்குவிப்பதற்குத் தொடர்ந்து நிதிசார் ஊக்கத்தொகைகள் (Financial Incentives) மற்றும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |