வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!
Sri Lankan Tamils
Vavuniya
By Independent Writer
Courtesy: Kabil
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டிவீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதான ஈகைசுடரினை மாவீரர்களின் தாயாரான செபஸ்தியாம்பிள்ளை புஸ்பவதி அம்மையார் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்