யாழ்ப்பாணம் ரன்னர்ஸ்! வடக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் ஓட்டப்போட்டி நிகழ்வு
வயது வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்கக்கூடிய 'யாழ்ப்பாணம் ரன்னர்ஸ்' (Jaffna Runners) ஓட்ட நிகழ்வு, உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டது என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (06.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த ஓட்டப் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் என கூறியுள்ளார்.
நிகழ்வு தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “இந்த ஓட்ட நிகழ்வில் ஆண், பெண் இருபாலரும் பங்குபற்ற முடியும்.
பதக்கங்களும் பரிசல்களும் வழங்கப்படும்
அதன்படி, ஊர்காவற்றுறை பாதையில் வரை 5கிலோ மீற்றர்,10கிலோமீற்றர், 15 கிலோ மீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பங்கு பற்றுபவர்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுவோர்க்கு பதக்கங்களும் பரிசல்களும் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவராகவும், 73 வயதிலும் உலகின் ஆறு நாடுகளில் மரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று பதக்கங்கள் வென்றவருமான சாண். சுந்தரம், போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அடையாள அட்டையைப் பதிவு செய்ய வேண்டும்
மேலும், இந்த ஓட்ட நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் போட்டிக்கான ஆடைகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் சனிக்கிழமை (09.05.2026) காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை ரில்கோ ஹோட்டலுக்கு வருகை தந்து பதிவினை மேற்கொண்டு தமக்கான இலக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவினை மேற்கொள்ளுபவர்கள் தமது அடையாள அட்டையைப் பதிவு செய்து இலக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) காலை 5.00 மணிக்கு கோட்டை அருகில் அனைவரும் ஒன்று கூடுமாறும் 6.00 மணிக்கு ஓட்ட நிகழ்வு ஆரம்பமாக உள்ளதால் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள லிங்கினை கிளிக் செய்வதன் ஊடாக மேற்கொள்ள முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 20 மணி நேரம் முன்