இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்

United Nations S. Sritharan
By Dharu Aug 30, 2026 12:30 PM GMT
Report

சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான நீள் பயணம் மாநாட்டில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து மேலும் பின்வருமாறு கருத்த வெளியிட்டார்.

“இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில ஆராய்ந்த மார்சுகி தருஸ்மன், யாஸ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ”இங்கு நடந்தது மிகப்பெரிய மனித பேரவலம். இங்கு எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டினர்.

(2010–2011 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த ஐ.நா. நிபுணர் குழு. அது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவாகும்)

"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை, 2010 அம் ஆண்டு இலங்கையில் வைத்து இவை அனைத்துக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன் | Evidence For The Final War Allegations

நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடே எமது தாய்மார்கள் இன்று வரை போராடுகின்றனர். இருந்தும் நீதிக்கான இடத்திற்கு எம்மால் இதுவரை போக முடியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெறும்போது எமது மக்கள் ஐ.நா அலுவலகம் முன்னால் இருந்து கைகூப்பி இங்கிருந்து செல்ல வேண்டாம் என அழுதார்கள்.

ஆனால் அவர்களை நாட்டில் இருப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விடவில்லை. அன்று தமது உறவுகளை சர்வதேச சமூகம் கைவிட்டதன் காரணத்தினால் பலரை இழந்துள்ளோம்.

இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்தவரே அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவர்கள் எங்கள் இழப்புக்களை நய்யாண்டி போக்கில் கையாண்டனர்.

அதுவே இன்று, எந்த ஒரு உள்ளக விசாரணை அலுவலகங்களையம் வேண்டாம் என்றும் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்” என கூறினார்.   

சிறீதரன் உரை - 01.30.00


தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016