யோஷிதவின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் அம்பலமான உண்மைகள்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேச ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்குத் தொடுக்கும் தரப்பு சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் மகன் யோஷிதவின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
விசாரணை
இதன்போது, யோஷித ராசபக்ச, கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளமாக சுமார் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோஷித ராசபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த தொகையில் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்றும் சாட்சியாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |