யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

Jaffna Sri Lanka Police Investigation National People's Power - NPP Ramalingam Chandrasekar Ramanathan Archchuna
By Theepan Oct 15, 2026 06:06 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சிலர் பங்கேற்காமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14.10.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சிலர் கூட்டத்தில் சமூகமளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

சில அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை

குறித்த துறைகள் தொடர்பான விடயங்களுக்கு யார் பதிலளிப்பது என்றும், பொறுப்பான அதிகாரிகள் இல்லாத நிலையில் அந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினார்.

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி | Jaffna District Coordinating Committee Meeting

இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலக அதிகாரிகள், கூட்டம் தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும், சில அதிகாரிகள் பங்கேற்க முடியாமை குறித்து முன்கூட்டியே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தனர். அதேவேளை, கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதியளித்த சில அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கூட்டத்தின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்புடைய அதிகாரிகள் தவிர்க்க முடியாது எனவும், தத்தமது துறைகள் சார்ந்த விடயங்களுக்கு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026