ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

Shiranthi Rajapaksa Colombo Hospital Prisons in Sri Lanka
By Sathangani Oct 15, 2026 04:47 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை இன்று (15) பிற்பகல் 04 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்த மருத்துவ குழுவில் 14 வைத்தியர்கள் உள்ளடங்குவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

ஷிரந்தி ராஜபக்சவின் இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை | A Medical Report On Health Condition Of Shiranthi

10 மில்லியன் ரூபாய் அரச பணத்தை குற்றவியல் ரீதியாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நாளை (16) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு நேற்று முன்தினம்(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருதய நோய் நிலைமை காரணமாக ஷிரந்தி ராஜபக்சவிற்கு அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதென அவரது சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ச நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026