யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சுமார் 10 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு
குறித்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துப் பொது நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியின் பயன்பாடு, திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |