ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்

Iran World Strait of Hormuz
By Pavi Oct 15, 2026 07:35 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களில் இதுபோன்ற 12 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முக்கிய கடல்வழிப் பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு உயர் மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ரோயல் கடற்படையின் கீழ் இயங்கும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO), ஒக்டோபர் 14ஆம் திகதி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வெளியேறிக்கொண்டிருந்த 19,000 தொன் எடையுடைய கொள்கலன் கப்பலொன்று, அடையாளம் காணப்படாத எறிபொருளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஈரான் ஆதரவு கவுதிப் படையினர்

எனினும், ஈரானின் இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் (IRNA) வெளியிட்ட தகவலின்படி, 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல் கடற்படையினரால் பயன்படுத்தப்படும் கண்ணிவெடியில் சிக்கியதைத் தொடர்ந்து வெடிப்பும் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான் | Iran Ramps Up Attacks On Ships In Strait Of Hormuz

இதனால் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்த செய்திகள் மற்றும் ஈரான் ஆதரவு கவுதிப் படையினர் சவூதி அரேபியாவில் நடத்திய தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சற்றே அதிகரித்துள்ளன.

சவூதி அரேபியாவின் தஹ்ரானில் அமைந்துள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டடமும் குறித்த தாக்குதல்களில் இலக்காகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM), ஈரானியக் கப்பல்களுக்கு எதிரான கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறியுள்ளது.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தம்மிடமே இருப்பதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

IRGC கடற்படை 

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், நீரிணையில் பயணிக்கும் கப்பல்கள் தங்களது வழிசெலுத்தல் மற்றும் அடையாளம் காணும் முறைமைகளைச் செயலிழக்கச் செய்தால், அவற்றை விரோதக் கப்பல்களாகக் கருதி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என IRGC கடற்படை எச்சரித்துள்ளது.

ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான் | Iran Ramps Up Attacks On Ships In Strait Of Hormuz

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தொடர்பான நிகழ்நேரத் தகவல்களைப் பதிவு செய்யும் கண்காணிப்புத் தளமொன்றின் தரவுகளின்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் ஒன்பது கப்பல்கள் மட்டுமே நீரிணையைக் கடந்துள்ளன.

உலக வர்த்தக அமைப்பும் (WTO) இந்த நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் தரவுத் தளமொன்றை நடத்தி வருகிறது.

எனினும், தானியங்கி அடையாள முறைமை (AIS) மூலம் அடையாளம் காணக்கூடிய கப்பல்களை மட்டுமே அந்தத் தளம் கண்காணிக்கிறது.

அதன் தரவுகளும் மிகக் குறைந்தளவிலான கப்பல் போக்குவரத்தையே காட்டுகின்றன.

AIS முறைமைகளைச் செயலிழக்கச் செய்தோ அல்லது அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்புடன் பயணித்தோ எத்தனை மசகு எண்ணெய் கப்பல்கள் நீரிணையைக் கடந்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி நிதி, வணிகத் தரவு மற்றும் ஊடக நிறுவனமான புளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தவிர்த்து, மத்திய கிழக்கிலிருந்து வெளியேறும் மசகு எண்ணெய் போக்குவரத்து, போருக்கு முந்தைய நிலையின் 75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை

இந்தக் கணக்கீட்டில் ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்துடன் மாற்றுப் பாதைகள் ஊடான போக்குவரத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னர், இந்த நீரிணை வழியாக நாளொன்றுக்கு சுமார் 150 கப்பல்கள் பயணித்தன.

ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான் | Iran Ramps Up Attacks On Ships In Strait Of Hormuz

உலகளாவிய கடல்வழி மசகு எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கும், உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் வரையிலான அளவும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதால், அதன் மூடல் மசகு எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருள் சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, உலகளாவிய கொள்கலன் கப்பல் போக்குவரத்துத் திறனில் ஆண்டுதோறும் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான அளவே இந்த நீரிணை வழியாகச் செல்வதால், கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் இதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்துள்ளது.

இருப்பினும், கப்பல்களுக்கான எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாகக் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. பெரும்பாலான இரசாயனப் பொருட்கள் திரவ வடிவில் தாங்கிக் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

எனினும், பாலிஎதிலீன் (PE), பாலிபுரொப்பிலீன் (PP) போன்ற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் சிறு உருண்டை வடிவில் கொள்கலன் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டைட்டானியம் டைஒக்சைட் (TiO₂) போன்ற பொருட்களும் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

மேலும், திரவ இரசாயனப் பொருட்களும் விசேட திரவப் போக்குவரத்துக் கொள்கலன்கள் (Isotanks) மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடி இரசாயனத் தொழில்துறையின் விநியோகச் சங்கிலியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026