மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (26) காலை வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு மற்றும் பிரதிவாதிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இன்று (26) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான மஹிந்தானந்தவை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
