சட்டவிரோதமாக இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அவர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீள அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள்
சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |