இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன் : அரியநேத்திரன் பகிரங்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்தியதற்கான எந்த கடிதமும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தொடர்ந்தும் இருக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் எனக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கட்சியின் பதில் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகப் பரப்பிலே சொல்கின்றார்கள், நான் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட போது என்னிடம் விளக்கம் கோரப்பட்ட நிலையில் விளக்க கடிதம் வழங்கியும் அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்காக எவ்வாறு செயற்பட வேண்டுமோ அவ்வாறு செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சயில் கலந்து கொண்டு அவர் வெளியிட்ட மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |