முன்னாள் எம்.பி கனகசபையின் மறைவு பேரிழப்பாகும் : சிறீதரன் எம்.பி இரங்கல்

Sri Lankan Tamils Batticaloa TNA S Shritharan
By Sathangani Sep 21, 2025 05:47 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய மறைந்த தன்மன்பிள்ளை கனகசபையின் (Thanmanpillai Kanagasabai) இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

அவரது மறைவையடுத்து சிறீதரன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”அவர் காலத்தில் நான் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயற்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.

கடந்த 2004, ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார்.

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

ஐவர் நாடாளுமன்றம் சென்ற வரலாறு

அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசியப்பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் நாடாளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும்.

முன்னாள் எம்.பி கனகசபையின் மறைவு பேரிழப்பாகும் : சிறீதரன் எம்.பி இரங்கல் | Ex Mp Kanagasabai Passed Away Shritharan Statement

அந்த தேர்தலில் வடகிழக்கு எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களை தெரிவு செய்தனர். அதில் ஒரு நிர்வாக அதிகாரியாக இருந்த கனகசபை அண்ணரும் தெரிவானார்.

அந்த காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும். கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்த காலம்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

அதனால் மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் எம் பி சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது 22, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர்.

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

மாதிவெல விடுதியில் தங்கியிருந்தனர் 

மட்டக்களப்பில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர்.

அப்போது 2006, நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்திற்கு மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என கனகசபை, அவர்களுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்தியின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார்.

முன்னாள் எம்.பி கனகசபையின் மறைவு பேரிழப்பாகும் : சிறீதரன் எம்.பி இரங்கல் | Ex Mp Kanagasabai Passed Away Shritharan Statement

அந்தப்பயம் காரணமாக 2010, தேர்தலில் வேட்பாளராக சம்மதிக்கவில்லை அதற்கு பின்னர் அவர் எந்த தேர்தல்களிலும் ஈடுபடவில்லை அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டு கூறினார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாக சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86, அகவையில் இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரினை பகிர்ந்து கொள்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

மந்திரிமனையின் புனரமைப்பிற்கு தடையாக இருந்த நபர் : வெளியான பின்னணி

மந்திரிமனையின் புனரமைப்பிற்கு தடையாக இருந்த நபர் : வெளியான பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி