செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி
செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு வலையத்தின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்ட ஏ. கே. பி. தசநாயக்க கேள்வியேழுப்பியுள்ளார்.
மன்னாரில் 2013 -2014 ஆம் ஆண்டுகளில் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் ஒல்லாந்தர் காலப்பகுதிக்குரியது என உறுதிப்படுத்தப்பட்டதை மேற்கொள்காட்டிய அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இவற்றை எடுத்துரைத்துள்ளார்.
DNA பரிசோதனைகள்
குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள தசநாயக்க, “செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வெளிநாட்டு காபன் பரிசோதனை மற்றும் DNA பரிசோதனைகள் செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றமிளைத்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நிச்சயம் நடைபெற வேண்டிய விடயமாகும்.
இன்றைய நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டு போல் அப்போது இந்த மன்னார் புதைகுழி தொடர்பில் பேசப்பட்டது.
இலங்கை இராணுவத்தால் கொள்ளப்பட்டவர்களே குறித்த புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எழும்பு கூடுகள் ஆகும் என ஜெனீவாவில் பேசப்பட்டது.ஆனால் அவ்வாறு இல்லை என தெரியவந்ததன் பின்னர் மாநாட்டில் மன்னிப்புக் கூட கேட்கவில்லை.
அதேபோலவே இன்றும் ஜெனீவாவில் செம்மணி தொடர்பில் பேசப்படுகிறது.அதனாலே பரிசோதனைகள் அவசியமானதாகும்.
புலிகளின் ஆக்கிரமிப்பு
செம்மணி புதைகுழி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.போர் காலத்தில் யாழ்.பகுதியை பலர் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஆகியவற்றோடு தமிழீழ விடுதலைப்புலிகளே கணகாலம் யாழ்.பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஆனாலும் இவை 1998 ஆம் ஆண்டுக்கானது என்றே கூறப்படுகிறது.மேலும் சுனாமியிலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.ஆதலால் காலத்தை தொடர்புபடுத்தி ஆய்வு கூட பரிசோதனைகளிலே கண்டறிய முடியும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
