முன்னாள் ஜனாதிபதிகளை வெளியேற்றியதற்கு இதுவே காரணம்! அநுர அரசு அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகள் நீக்கப்பட்டிருப்பது பற்றி எவரும் ஆச்சரியப்பட தேவையில்லை, ஏனெனில் இது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் என்று உறுதியளித்திருந்தது என்று நினைவூட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் எங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி நீக்கப்பட்டுள்ளன.
மக்களுடனான உடன்படிக்கை
இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். அதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தால், தாங்களே தங்கள் குடியிருப்புகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும்.
அது வெறும் தேர்தல் வாக்குறுதி என நினைத்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. எங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் தேர்தல் நோக்கமல்ல; அது இந்த நாட்டை முன்னேற்றும் மக்களுடனான எங்கள் உடன்படிக்கையாகும்,” என்றார்.
மேலும், “ இதற்கு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. நாங்கள் இதைச் செய்யாதிருந்தால் தான் மக்கள் கவலைப்பட வேண்டும்,” என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
