துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பிரபல கால்பந்து நட்சத்திரம் - தேடுதல் பணி தீவிரம்
துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை காவு கொண்ட நிலநடுக்க பேரழிவில் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியன் அட்சு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
செல்சியா மற்றும் நியூகேஸில் அணிகளுக்காக சுப்பர் லீக் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர் பூமி அதிர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கஹ்ரமன்மராஸ் பகுதியில் கால்பந்து விளையாடும் துருக்கிய அணியான ஹடாய்ஸ்போர் அணிக்காக விளையாடிவருகின்றார்.
Thoughts and prayers for former Chelsea winger Christian Atsu, who has reportedly been lost amongst rubble following the Earthquake in Turkey.
— The Chelsea Spot (@TheChelseaSpot) February 6, 2023
??? pic.twitter.com/hCaj3AJiFn
குறித்த இடிபாடுகளில் பல விளையாட்டு வீரர்கள் சிக்கியிருந்ததாகவும், ஆனால் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
தீவிர தேடல்
இந்நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படும் 31 வயதான அட்சு மற்றும் ஹடாய்ஸ்போர் அணியின் விளையாட்டு இயக்குனர் Taner Savut ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தற்போது நடந்து வருகவதாக தெரிவிக்கப்படுகின்றது.

