சஷீந்திர ராஜபக்ஷவின் மோசடிக்கு துணைபோன பெண் அதிகாரி கைது
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான சந்தேகத்திற்கிடமான இழப்பீட்டு மோசடி தொடர்பாக, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (08.10.2025) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு 'அரகலயா' போராட்டத்தின் போது சேதமடைந்த மகாவலி அதிகாரசபை சொத்துக்கான இழப்பீட்டுச் செயல்பாட்டின் போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி: இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்தில் முறைப்பாடு
இழப்பீட்டுத் தொகையை அங்கீகரிக்க அழுத்தம்
சந்தேக நபர் அரசாங்க அதிகாரிகளுக்கு ரூ. 885,000 இழப்பீட்டுத் தொகையை அங்கீகரிக்க அழுத்தம் கொடுத்ததாகவும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளார்.
இதேவேளை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்சவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி: இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்தில் முறைப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
