சீன நாட்டவரிடம் 2 கோடி கொள்ளை! முன்னாள் இராஜாங்க அமைச்சரின் புதல்வன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் நேற்று (21-07-2026) இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சீன நாட்டவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், சீன நாட்டவரொருவரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் பணத்தை அபகரித்தமை தொடர்பாக சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இன்றைய தினம் (22-07-2026) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு, கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |