பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் : ஆசிரியருக்கு பணி இடை நீக்கம்
Sri Lanka
North Central Province
Sri Lankan Schools
Education
By Sathangani
பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை வடமத்திய மாகாண (North Central Province) கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண அரச பாடசாலைகளின் தவணைப் பரீட்சை வினாத்தாளே இவ்வாறு வெளியாகியுள்ளது.
பணி இடை நீக்கம்
6 ஆம் மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பிலேயே இந்த ஆசிரியர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை வட மத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்திருந்தார்.
இந்த வினாத்தாள் கடந்த 05.01.2025 அன்று நள்ளிரவு சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி