விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள், ஆயுதங்ளைத் தேடி அகழ்வு (படங்கள்)
Sri Lanka Army
Sri Lanka Police
Mullaitivu
By Vanan
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு தேவிபுரம் "அ" பகுதியில் உள்ள வீட்டுக் காணி ஒன்றில் அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்ற அனுமதி
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வுப் பணியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்