முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lankan Peoples
By Dhilak
முல்லைத்தீவு (Mullaitivu) காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வுப் பணிகளானது, நேற்றையதினம் (08) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த அகழ்வுப் பணிகளுக்கு கொழும்பு (colombo) நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
அகழ்வுப் பணி
இதன் படி, அகழ்வுப் பணிகளை கொழும்பில் இருந்து வருகைதந்த காவல்துறை குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றையதினம் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இன்றும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி