யாழில் அரச அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட சீவல் தொழிலாளி
யாழ் (Jaffna) - வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை (Point Pedro) மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சீவல் தொழிலாளி இன்று (07.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன்.
திடீரென அங்கு சிவில் உடையில் வந்த பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேரம் கடந்துவிட்டதாக கூறி மிரட்டினார்கள்.
ஆனால் அப்போது நேரம் 5.40 ஆக இருந்தது அவர்கள் தடுத்துவைத்து என்னை மறித்து 06.00 மணிவரை வைத்திருந்து வழக்கு பதிவு செய்து கையொப்பம் வாங்கினார்கள்.
அதன்பின்பு மதுபானசாலைக்கு செல்லுமாறும் அங்கு அதிகாரிகள் இருப்பதாகவும் கூறினார்கள் அங்கு சென்றதும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் என்னுடைய முகம்,வயிறு,கால் பகுதிகளில் மிக மோசமாக தாக்கினர்.
என்னால் வலி தாங்க முடியவில்லை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வாயில் மோசமாக தாக்கினார்கள் எட்டுபேர் கொண்ட அதிகாரிகள் என்னை விழுத்தி காலால் மிதித்தார்கள்.” என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
