சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கட்டைக்காடு இளைஞர்களின் முன்மாதிரியான நடவடிக்கை
Sri Lankan Tamils
Jaffna
By Kajinthan
வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் முன்மாதிரியான நடவடிக்கையில் பிரதேச இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதியை பிரதேச இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த முற்றுகையின் போது கசிப்பு கோடாவை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எரியூட்டப்பட்ட கசிப்பு
இந்நிலையில் கசிப்புடன் இருந்த கசிப்பு கோடா இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினரின் ஈடுபாடு காணப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்