புலிகளுடனான யுத்த காலத்தில் மகிந்தவின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? இன்று வெளிவந்த தகவல்
எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் (Mahinda Rajapaksa) அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்தார்.
நயினாதீவில் இடம்பெற்ற தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ். நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே இதை தெரிவித்தார்.
“எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் (Mahinda Rajapaksa) அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது.
எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த சொத்துக்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார்.
அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது” என அமைச்சர் கூறினார்.