கோட்டாபயவை ஆதரித்த பாவத்தை அனுபவிக்கின்றேன்! புலம்பும் விஜேதாச ராஜபக்ச
பசில் ராஜபக்சவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வாக்களித்த 69 லட்சம் மக்களுக்கு மாத்திரமல்ல, சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.
அரசாங்கம் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் அதனை வெளியிட முடியும். அரச தலைவர் தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில் ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச தற்போது புடலங்காய் நிலைமைக்கு சென்றுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை குறித்து கவலையில் இருக்கின்றேன். அரச தலைவர் வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.