ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட புதிய விளையாட்டுச் சட்டம் தொடர்பான அறிக்கை
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, குழுத் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் இன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, முறையான வரைவு தயாரித்து, புதிய விளையாட்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்திருப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சட்ட கட்டமைப்பு
இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பு மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் தற்போதைய கட்டமைப்பை ஆராய்ந்த பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை முழுமையாக மாற்றி தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழுவை நிறுவுவது நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முதன்மையான பரிந்துரையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விளையாட்டுக்கள் தொடர்பான கொள்கை தயாரிப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழு
எட்டு அடிப்படை நோக்கங்களை அடைவதற்காக தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் பதவிக்காலம் 4 வருடங்களாக இருக்க வேண்டுமென்பதோடு, அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நியமனங்களை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The Expert Study Committee appointed to recommend a new Sports Act in #SriLanka submitted its report to President @RW_UNP.
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) November 9, 2023
The Committee made a number of recommendations to comprehensively change the existing legal framework and administrative structure for sports in 🇱🇰. (1/8) pic.twitter.com/XLpDj5nkJN