சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Sri Lanka Cricket
By Vanan
சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து இன்று(9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை, வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வழிமொழியப்பட்டு பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரேரணை மீதான விவாதம்
ஊழல், மோசடியுடன் தொடர்புடைய சிறிலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும் என இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இந்தப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்று, மாலை நிறைவேற்றப்பட்டது.


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 11 மணி நேரம் முன்

ஆயிரம் சிறுவர்களை காவுகொண்ட ஈழ இனப்படுகொலைப் போர்
15 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி