பலாலியில் கிணறு ஒன்றிருந்து பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.
காவல்துறையினர் விசாரணை
அது தொடர்பில் பலாலி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிணற்றினுள் காணப்படும் வெடி பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி