நாடளாவிய ரீதியில் காணாமற் போயுள்ள வெடிபொருட்கள் -தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள பல கருங்கல் வேலைத் தளங்களுக்கு கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான வெடிபொருட்கள் பல்வேறு அளவுகளில் அவ்வப்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கருங்கல் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படும் வெடிபொருட்கள் காணாமல் போவது அல்லது தவறான இடத்தில் வைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளது.
எனவே, இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு பணியை தொடங்க அரசுக்கு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, லியங்கஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கருங்கல் குவாறிகளில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட அளவோடு ஒப்பிடும் போது, அதில் எவ்வித வெடிப்பும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவு வெடிபொருட்களுக்கு என்ன ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள் ஏனைய பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.
வெடிமருந்துகள், அமோனியம் நைட்ரேட் மற்றும் வாட்டர் ஜெல் போன்ற வெடிபொருட்களே குவாறிகளில் இருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
