வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரியின் மோசடி அம்பலம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவரிடம் பணம் பறித்த சம்பவம் தொடர்பில் நேற்று(13) கைது செய்யப்பட்டார்.
ருமேனியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பெண் அளித்த முறைப்பாடு
பணம் வழங்கிய நிலையில் உறுதியளித்தபடி வெளிநாட்டுக்கு அனுப்பாத காரணத்தால் பணியகத்தின் விசாரணை பிரிவில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது
அவரின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை இன்று (14) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |